மார்கழி

ராம் ராம் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்

अयनं दक्षिणं रात्रिरुत्तरं तु दिवा भवेत् । दैवतं तदहोरात्रं तत्त्रिंशन्मास उच्यते ।।

மனிதர்களின் ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒரு தினமாகும். தக்‌ஷிணாயனமானது இரவாகவும் உத்தராயனமானது பகலாகவும் கணக்கிடபடுகின்றது..

तद्दिनस्य उषःकालं चापमासं विदुर्बुधाः। तस्मात्सर्वप्रयत्नेन चापमासे दिने दिने।। उषःकाले तु सम्प्राप्ते बोधयित्वा जनार्दनम् । समभ्यर्च्य भजेद्विष्णुं जनानां दोषशान्तये ।।भास्करीये

மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலையாகும்.ஆதலால் நமது எல்லா தோஷங்களும் நீங்க அவஶ்யம் இந்த மாதத்தில் ப்ரதி தினமும் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ப்ரபோதனம்( சுப்ரபாதம்) செய்து பஜிக்க வேண்டும்..

उषःकाले तु सम्प्राप्ते अर्चयित्वा जनार्दनम् । उपचारैः षोडशभिर्मुद्गान्नं च निवेदयेत् ।। ब्रह्माण्डपुराणे

விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஷோடஶோபசார பூஜை செய்து வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும் ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது..

उषःकाले तु सम्प्राप्ते प्रत्यूषे स्नानमाचरेत् । अर्चयेच्च जगन्नाथं यावत्सूर्योदयात्पुरा ।।आदित्यपुराणे।।

விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சூர்யோதயத்திற்கு முன்பு ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்..

ஸ்நானம் செய்து ஸந்த்யாவந்தனம் தானே செய்ய வேண்டும்...??? ஆம் ஆனால் மார்கழி மாதத்திற்கு விதி விலக்கு உண்டு..

ततःप्रभातसमये अर्घ्यं प्रक्षिप्य वै द्विजः । गायत्रीं च ततो जप्त्वा उपतिष्ठेत भास्करम् ।। आदित्य पुराणे

காலையில் ஸ்நானம் செய்து அர்க்யப்ரதானம் வரை செய்து பிறகு சூர்யோதயத்திற்கு முன்பு பூஜையை முடித்து பிறகு காயத்ரீ ஜபத்தை செய்து சூர்யோதயத்திற்கு பிறகு உபஸ்தானம் செய்ய வேண்டும்..( சில ஶிஷ்டர்கள் பூஜை முடித்தபிறகே அர்க்யப்ரதானம் செய்ய சொல்கின்றனர்)

விஷ்ணுவை மட்டும் தான் பூஜிக்க வேண்டுமா?? ஶிவனையும் பூஜிக்கலாமா?? அவஶ்யம் பூஜிக்கலாம்

चापराशौ स्थिते सूर्ये उषःकाले दिने दिने । अभिषेकं ततः कुर्याद्रौद्रमन्त्रेण रुद्रवित् ।। अर्कपुष्पैश्च बिल्वैश्च पूजयेच्च महेश्वरम् । नैवेद्यं च ततः कुर्यात् लोक संहार शान्तये।। शिव पुराणे।।

மார்கழி மாதத்தில் ஸ்ரீ ருத்ரப்ரஶ்னத்தை சொல்லி ஸ்ரீ பரமேஶ்வரனுக்கு அபிஷேகம் செய்து , எருக்கம் பூ மற்றும் பில்வங்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்தால் லோகத்தில் ஏற்படும் எல்லா அழிவுகளும் நீங்கும்....

தனுர்மாஸ பூஜையினால் என்ன லாபம்..??? உண்டே!!!!

कोदण्डस्थे सवितरि प्रत्यूषे पूजयेद्धरेः । सहस्राब्दार्चनफलं दिनेनैकेन लभ्यते ।।भागवते

மார்கழி மாதம் விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஒரு நாள் பூஜித்தால், ஆயிரம் ஆண்டு பூஜித்த பலன் ஏற்படும்..

நாம் ஒரு ரூபாய் share marketஇல் invest செய்தால் 1000₹ வரும் என்றால் எப்படி invest செய்கின்றோம்.. அது போல் நமக்கும் ஓர் அரிய வாய்ப்பை ஶாஸ்த்ரம் கொடுக்கின்றது ஒரு நாள் பூஜித்தாலே ஆயிரம் ஆண்டு பூஜித்த பலனாகில் , இம்மாதம் முழுவதும் உஷ: கால( விடியற்காலை) பூஜையை செய்து பகவத் அனுக்ரஹத்திற்கு பாத்திர்களாக ஆவோம்